தமிழ் இலக்கிய வரலாறு

பேரா. முனைவர் மு. அருணாசலம்

பேரா. முனைவர் இராஜா வரதராஜா


பேராசிரியர் முனைவர் மு. அருணாசலம்

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் வட்டாரம் கொம்பேறிபட்டி கிராமத்தில் 06.05.1973-இல் பிறந்தவர். திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), தமிழாய்வுத்துறையில் இருபத்து ஆறு ஆண்டுகளாகப் பணியாற்றியவர்.

தற்போது துறையூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருபவர். நாற்பதிற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களைப் படைத்தவர். பல்வேறு ஆய்விதழ்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் வழங்கியவர். இவரிடம் பதினெட்டு மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

சாகித்ய அகெதமி இளம் ஆய்வாளர் விருது, தமிழ் வளர்ச்சித்துறை பரிசு, திருச்சி மாவட்ட நலப்பணிக்குழுவின் சிறந்த படைப்பாளர் விகுது, மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது ஆகிய இலக்கிய விருதுகளைப் பெற்ற சிறப்பிற்குரியவர்.

சங்க இலக்கியம்,ஒப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, புதுக்கவிதை இலக்கியம், நவீன இலக்கியம், இதழியல், திருநங்கை இலக்கியம், சூழல் இலக்கியம், ஹைகூ, சென்ரியு ஆகிய ஆய்வுக்களங்களில் தொடந்து இயங்கி வருபவர்.

தமிழ்ப் புதுக்கவிதைகளின் நோக்கும் போக்கும், தமிழ்ப் புதுக்கவிதைகளில் தொன்மங்கள், ரூசோவும் பாரதிதாசனும், எமிலி, வள்ளுவரும் பிறகும், தமிழ் இலக்கியங்களில் அரவாணிகள், தமிழும் உலகச் செம்மொழிகளும், சிலப்பதிகார ஒப்பாய்வுகள், சங்க இலக்கியங்களும் காளிதாசனும், ஐந்திணை ஹைகூவில் ஐந்து பார்வைகள், சங்க அகப்பாடல்களும் வித்யாபதியின் காதல் கவிதைகளும், சங்க இலக்கியம் அகமும் புறமும் ஆகியவை புகழ்பெற்ற நூல்களாகும் தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரி பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பெற்றுள்ளன.

அவ்வகையில் வெளிவரும் "தமிழ் இலக்கிய வரலாறு" (TRB, UGC NET, UPSC TNPSC போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கும், மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் அதனை எதிர்கொண்டு வெற்றி பெறும் வகையில் படைக்கப்பட்டுள்ள சிறப்பிற்குரியது.

பதிப்பகத்தார்



பேராசிரியா முனைவர் இராஜா வரதராஜா

தஞ்சாவூர் மாவட்டம் பனவெளி கிராமத்தில் திரு. வ. இராஜாங்கம் நாட்டார் திருமதி ஆண்டாள் ராஜாங்கம் நாட்டார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்; திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல் முதல்வராகப் பொறுப்பு வகித்தவர்.

தமிழறிவு, பயன்முறைத்தமிழ், மக்கள் தகவல் தொடர்பியல், விளம்பரவியல், பட்டினப்பாலை தெளிவுரை, தொகை அகராதி, ஒலி வேறுபாட்டு அகராதி அல்லது மயங்கொலிச் சொல் அகராதி, பனுவல் அகராதி, உடலியல், பொதுத்தமிழ் வினா-விடைகள் உட்பட்ட இருபத்தொரு பனுவல்களின் ஆசிரியர்.

இருபத்தைந்து ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியற்றுகிறார். மாணாக்கர் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் ஆகும் வகையில் போட்டித் தேர்வு நூல்களைத் தந்து வருபவர்

பதிப்பகத்தார்


Publication detail

Author: பேரா,முனைவர் மு. அருணாசலம் பேரா, முனைவர் இராஜா வரதராஜா
Price: ₹ 370

Enquiry Us

    Related Publications

    PG TRB - ENGLISH (NEW SYLLABUS – 2025)

    Author: Dr. V. MURALIDHARAN / Dr. AHALYA PADMANABHAN
    Price: ₹ 349 ₹ 261.75

    தமிழ் இலக்கிய வரலாறு

    Author: பேரா,முனைவர் மு. அருணாசலம் பேரா, முனைவர் இராஜா வரதராஜா
    Price: ₹ 370

    0